தமிழ் சினிமாவில் பல பிரபல ஜோடிகள் இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜோடி என்றால் கண்டிப்பாக நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு.
இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து குறித்து பல செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் தற்போது இதை குறித்து நீதிபதி போட்ட உத்தரவு குறித்து தான் தற்போது இந்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
15 ஆண்டுகள் தனதும மனைவி உடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த வந்த நடிகை ஜெயம்ரவி திடீரென தன் மனைவி பிரிய போவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். இந்த நிலையில் நவம்பர் 15ஆம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகும் படி கூறியிருந்தன இந்த நிலையில் ஜெயம் ரவி நீதிமன்றத்தில் நேரில் சென்றார்.
ஆனால் அவரது மனைவி ஆர்த்தி அவர்கள் காணொளி மூலம் ஆஜராகியதாகவும் கூறப்பட்டுள்ளது. இவருடைய வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அதற்கு நீதிபதி அவர்கள் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.